29:6:2020 Braking News ஜீ ஜின்பிங்கும் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள்.. சீனத் துருப்புகள் ஊடுருவுகிறது.. ப.சிதம்பரம் சாடல் சென்னை: சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது எப்படி என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லை பிரச்சினை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் எல்லையில் நடப்பதை மறைக்கிறார், சீனாவுக்கு நற்சான்று தருகிறார் என காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தது. இந்த நிலையில் சோனியாவை தலைவராக கொண்ட ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிலிருந்து நன்கொடை பெற்றதை பாஜக சுட்டிக் காட்டி விமர்சனங்களை முன் வைத்தது. பெரிய பெரிய கூடாரம்.. அதிர வைத்த அந்த 9 கிமீ பகுதி.. கல்வானில் சீனாவின் திட்டம்தான் என்ன? பின்னணி! கொரோனா குற்றச்சாட்டு இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா நிதி குறித்து (பிஎம் கேர்ஸ்) காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிதிக்கு சீனாவில் இருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நேற்றைய தினம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் சீனாவை ஏன் ஆக்கிரமிப்பாளர் என பிரதமர் மோடி அழைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. ப சிதம்பரம் நிவாரண நிதியம் இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் 2005-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ.1 கோடியே 45 லட்சம் நன்கொடை பெற்றது தவறு என்றால், 2020-ம் ஆண்டில் சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள ‘பி.எம்.-கேர்ஸ்' (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்) நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? ஊடுருவல் சீன நிறுவனங்கள் சீனா எப்போது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020-ல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்கு பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா? 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ 1.45 கோடி நன்கொடை பெற்றது தவறு என்றால் 2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள PM-CARES நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? 1,015 பிற்பகல் 9:23 - 28 ஜூன், 2020 Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை இதைப் பற்றி 382 பேர் பேசுகிறார்கள் ஊஞ்சலாடும் 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், இந்திய பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? என ப சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Popular posts
மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்) செய்திகள்: 26:7:2020 புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்கா பாப்பான்விடுதி கிராமத்தில் வசித்து வரும் S P N செல்வம் Ex கவுன்சிலர் தேர்தல் முன்விரோத காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும்10 அடியாட்களுடன் சேர்ந்து 25/07/20 காலை 11 மணிக்கு வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து செல்வத்தை பெண் என்றும் பாராமல் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்கள் தற்போது ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது சம்மந்தமாக ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் ஏமாற்றி வருகிறார்கள். நடவடிக்கை தாமதமாவதால் குற்றவாளிகள் தப்பிக்க ஏதுவாகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
Image
புது உச்சம்: தமிழகத்தில் ஒரே நாளில் 5849 பேருக்கு கொரோனா.. சென்னையைவிட பிற பகுதியில் 6 மடங்கு அதிகம். சென்னை: தமிழகத்தில் மேலும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. எனவே, முதல்முறையாக 5,000 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட புள்ளி விவரம் பல்வேறு விவகாரங்களை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது சென்னையை விட பிற மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் 100ல் ஒரு மடங்கு கூட சுகாதார வசதி இல்லாத மாவட்டங்களில் இப்படி கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கவலையளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 444 பேர் பலி.. வெளியான புது லிஸ்ட்.. பீதி தேவையில்லை- விஜயபாஸ்கர் மருத்துவ கட்டமைப்பு தேவை மருத்துவ கட்டமைப்பு தேவை அரசு உடனடியாக பிற மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்பை அதிகரிப்பது, கட்டுப்பாடுகளை அதிகரிப்பது போன்றவைதான், இந்த பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதோ அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தை பார்த்தாலே, அது புரிந்து விடும். தமிழகத்தில் அதிகம் தமிழகத்தில் அதிகம் தமிழகத்தில் இன்று மேலும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவாகும். இன்று 74 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 50 பேர் அரசு மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். பிற 24 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். கொரோனா உயிரிழப்பு கொரோனா உயிரிழப்பு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,700 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு குறைவுதான். சென்னையில், 1171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில், கொரோனாவுக்கு இன்று, 21 பேர் பலியாகியுள்ளனர். குணமடைவோர் விகிதம் குணமடைவோர் விகிதம் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் இதுவரை 1,31,583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடையும் விகிதம் அதிகமாக இருப்பது ஒரு நல்ல விஷயம்தான். மாவட்டங்கள் நிலவரம் மாவட்டங்கள் நிலவரம் சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக பாதிப்பு என்றால், அது திருவள்ளூர் மாவட்டத்தில்தான். அங்கு 430 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவாக, 414 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 223 பேர், கோவை 178, திண்டுக்கல் 99, கள்ளக்குறிச்சி 86, காஞ்சிபுரம் 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி 152, மதுரை 197, புதுக்கோட்டை 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Image
*மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை* *இதழ்)* *செய்திகள்:* *31:7:2020:* *சென்னை :* *நீலகிரி மாவட்டம்* *கூடலூர் , பந்தலூர்* *பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் போதிய* *அளவில் இல்லாத காரணத்தால் நோயாளிகளை* *கோவை அல்லது கேரள மாநிலத்திற்க்கு* *கொண்டு செல்லும்போதே உயிரிழப்புகள் ஏற்ப்ட்டு விடுகிறது* . *எனவே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட* *கழகத்துக்கு சொந்தமான எல்லா உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ள Garden Hospital கார்டன் மருத்துவமனையை (ஏலியாஸ் கடை) பொதுமக்களின் பயண்பாட்டுக்கு சிறு மருத்துவ கல்லூரி யாக பெற்றுத்தர மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்)* *குழுமம்* *முழு* *முயற்ச்சி மேற்க்கொண்டு அ.இ.அதிமுக.நெலாக்கோட்டை முன்நாள் ஊராட்ச்சி மன்ற தலைவர் திருமதி. S. பிரேமலதா மற்றும் குரு தர்மபிசரன சபாவின் நீலகிரி மாவட செயலாளர் அகிலேஷ் ஆகியோரின் முயற்ச்சியால் பொதுமக்களிடம் பெருமளவில் கையொப்பம் பெற்றுக்கொண்டு மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களிடம் இது சம்பந்தமான ஆவணங்களை 27:7:2020 அன்று சமர்பித்தனர். இது சம்பந்தமாக மாண்புமிகு தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து ஆவணங்களை ஆய்வு செய்து மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் வாயிலாக உடனடியாக மக்களின் துயர் நீக்குவதாக* *தெரிவித்துள்ளார்.* *இதற்க்கான ஆவணங்களையும் அஇஅதிமுக கடந்த தேர்தல் திட்ட மலரையும் மனித ஊரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்) பத்திரிக்கையின் இணை ஆசிரியர் திரு.R.அகிலேஷ் அவர்கள் மாண்புமிகு உள்ளாட்ச்சி துறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களிடம் சமர்ப்பித்தார்.*
Image
ஜெய்ப்பூரில் பின்னடைவு.. கடுமையான முடிவு எடுத்த சச்சின் பைலட்.. 2வது ரவுண்டுக்கு தயார்? ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், கோபம் அடைந்த சச்சின் பைலட், கட்சிக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டுடன் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தானில் ரிசார்ட் அரசியல்.. மனதில் நிழலாடும் கூவத்தூர் அதிரடிகள்! ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் இன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தனது கட்சியின் அழைப்பை நிராகரித்தார். அதன்பிறகு அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் பலமுறை நடந்த பேச்சுவார்த்தையிலும் சச்சின் பைட் இறங்கிவரவில்லை. இதற்கிடையே முதல்வர் அசோக் கெலாட்டை மாற்ற மறுத்த காங்கிரஸ் மேலிடம் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கி இருப்பதால், கடுப்பான சச்சின் பைலட் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டை நீக்க வேண்டும் என கிளர்ச்சியை நடத்தி வரும் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்த நடந்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், அவர் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கட்சிக்குள் ராஜேஷ் பைலட் சாதித்தார்... மகன் சச்சின் வெளியேற்றம்.... விழிக்குமா காங்கிரஸ்? சுர்ஜேவாலா அழைப்பு 18 பேர் பங்கேற்கவில்லை முன்னதாக இன்றைய கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விடுத்த இரண்டாவது அழைப்பையும் நிராகரித்ததுடன் தனது நிலைப்பாட்டையும் அறிவித்தார். சுர்ஜேவாலா நேற்று மாலை அளித்த பேட்டியின்போது 'கட்சியில் சில வேறுபாடுகள் இருந்தால், அவர்கள் அதை திறந்த மனதுடன் சொல்ல வேண்டும். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தீர்வைக் காணத் தயாராக இருக்கிறார்கள் ' என்றார். ஆனால் சச்சினோ இன்று நடந்த கூட்டத்தை புறக்கணித்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அத்துடன் சச்சின் பைலட் , முதல்வர் அசோக் கெலாட்டுடன் இணைந்து செயல்பட முடியாது என்று தற்போது தெளிவுபடுத்தியும் விட்டார். இதனால் சச்சின் பாஜக முகாமுக்கு தாவுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளளது. எவ்வளவு ஆதரவு ஆட்சி கவிழும் தற்போதைய நிலையில் 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 125 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. சச்சின் பைலட்டுக்கு தற்போது 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை 30 பேரும் ராஜினாமா செய்தால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்படும். சுயேட்சைகள் ஆதரவு சச்சின் முகாம் சொல்வதென்ன எனினும் கூட்டணி எம்எல்ஏக்கள். சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்க கெலாட் போராடி வருகிறார். இந்நிலையில் , சச்சின் பைலட்டின் முகாமில் உள்ளவர்கள் கூறும் போது , முதல்வர் அசோக் கெஹ்லோட்டின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் தான் ஆதரவு இருப்பது போல் காட்டப்படுகிறது. ஆனால் சட்டசபையிலோ அல்லது ஆளுநருக்கு முன்பாக எண்ணிக்கை நடத்தப்பட்டால், கெலாட்டுக்கு எதிராக இருக்கும் என்றார்கள். எடுத்து அடுத்த கட்ட நகர்வுக்கு தயராகி வருகிறாராம். அவர் பாஜகவில் இணைவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
Image