ஜெய்ப்பூரில் பின்னடைவு.. கடுமையான முடிவு எடுத்த சச்சின் பைலட்.. 2வது ரவுண்டுக்கு தயார்? ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், கோபம் அடைந்த சச்சின் பைலட், கட்சிக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டுடன் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தானில் ரிசார்ட் அரசியல்.. மனதில் நிழலாடும் கூவத்தூர் அதிரடிகள்! ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் இன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தனது கட்சியின் அழைப்பை நிராகரித்தார். அதன்பிறகு அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் பலமுறை நடந்த பேச்சுவார்த்தையிலும் சச்சின் பைட் இறங்கிவரவில்லை. இதற்கிடையே முதல்வர் அசோக் கெலாட்டை மாற்ற மறுத்த காங்கிரஸ் மேலிடம் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கி இருப்பதால், கடுப்பான சச்சின் பைலட் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டை நீக்க வேண்டும் என கிளர்ச்சியை நடத்தி வரும் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்த நடந்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், அவர் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கட்சிக்குள் ராஜேஷ் பைலட் சாதித்தார்... மகன் சச்சின் வெளியேற்றம்.... விழிக்குமா காங்கிரஸ்? சுர்ஜேவாலா அழைப்பு 18 பேர் பங்கேற்கவில்லை முன்னதாக இன்றைய கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விடுத்த இரண்டாவது அழைப்பையும் நிராகரித்ததுடன் தனது நிலைப்பாட்டையும் அறிவித்தார். சுர்ஜேவாலா நேற்று மாலை அளித்த பேட்டியின்போது 'கட்சியில் சில வேறுபாடுகள் இருந்தால், அவர்கள் அதை திறந்த மனதுடன் சொல்ல வேண்டும். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தீர்வைக் காணத் தயாராக இருக்கிறார்கள் ' என்றார். ஆனால் சச்சினோ இன்று நடந்த கூட்டத்தை புறக்கணித்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அத்துடன் சச்சின் பைலட் , முதல்வர் அசோக் கெலாட்டுடன் இணைந்து செயல்பட முடியாது என்று தற்போது தெளிவுபடுத்தியும் விட்டார். இதனால் சச்சின் பாஜக முகாமுக்கு தாவுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளளது. எவ்வளவு ஆதரவு ஆட்சி கவிழும் தற்போதைய நிலையில் 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 125 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. சச்சின் பைலட்டுக்கு தற்போது 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை 30 பேரும் ராஜினாமா செய்தால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்படும். சுயேட்சைகள் ஆதரவு சச்சின் முகாம் சொல்வதென்ன எனினும் கூட்டணி எம்எல்ஏக்கள். சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்க கெலாட் போராடி வருகிறார். இந்நிலையில் , சச்சின் பைலட்டின் முகாமில் உள்ளவர்கள் கூறும் போது , முதல்வர் அசோக் கெஹ்லோட்டின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் தான் ஆதரவு இருப்பது போல் காட்டப்படுகிறது. ஆனால் சட்டசபையிலோ அல்லது ஆளுநருக்கு முன்பாக எண்ணிக்கை நடத்தப்பட்டால், கெலாட்டுக்கு எதிராக இருக்கும் என்றார்கள். எடுத்து அடுத்த கட்ட நகர்வுக்கு தயராகி வருகிறாராம். அவர் பாஜகவில் இணைவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
Popular posts
29:6:2020 Braking News ஜீ ஜின்பிங்கும் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள்.. சீனத் துருப்புகள் ஊடுருவுகிறது.. ப.சிதம்பரம் சாடல் சென்னை: சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது எப்படி என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லை பிரச்சினை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் எல்லையில் நடப்பதை மறைக்கிறார், சீனாவுக்கு நற்சான்று தருகிறார் என காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தது. இந்த நிலையில் சோனியாவை தலைவராக கொண்ட ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிலிருந்து நன்கொடை பெற்றதை பாஜக சுட்டிக் காட்டி விமர்சனங்களை முன் வைத்தது. பெரிய பெரிய கூடாரம்.. அதிர வைத்த அந்த 9 கிமீ பகுதி.. கல்வானில் சீனாவின் திட்டம்தான் என்ன? பின்னணி! கொரோனா குற்றச்சாட்டு இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா நிதி குறித்து (பிஎம் கேர்ஸ்) காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிதிக்கு சீனாவில் இருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நேற்றைய தினம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் சீனாவை ஏன் ஆக்கிரமிப்பாளர் என பிரதமர் மோடி அழைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. ப சிதம்பரம் நிவாரண நிதியம் இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் 2005-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ.1 கோடியே 45 லட்சம் நன்கொடை பெற்றது தவறு என்றால், 2020-ம் ஆண்டில் சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள ‘பி.எம்.-கேர்ஸ்' (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்) நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? ஊடுருவல் சீன நிறுவனங்கள் சீனா எப்போது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020-ல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்கு பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா? 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ 1.45 கோடி நன்கொடை பெற்றது தவறு என்றால் 2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள PM-CARES நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? 1,015 பிற்பகல் 9:23 - 28 ஜூன், 2020 Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை இதைப் பற்றி 382 பேர் பேசுகிறார்கள் ஊஞ்சலாடும் 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், இந்திய பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? என ப சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
*மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை* *இதழ்)* *செய்திகள்:* *31:7:2020:* *சென்னை :* *நீலகிரி மாவட்டம்* *கூடலூர் , பந்தலூர்* *பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் போதிய* *அளவில் இல்லாத காரணத்தால் நோயாளிகளை* *கோவை அல்லது கேரள மாநிலத்திற்க்கு* *கொண்டு செல்லும்போதே உயிரிழப்புகள் ஏற்ப்ட்டு விடுகிறது* . *எனவே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட* *கழகத்துக்கு சொந்தமான எல்லா உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ள Garden Hospital கார்டன் மருத்துவமனையை (ஏலியாஸ் கடை) பொதுமக்களின் பயண்பாட்டுக்கு சிறு மருத்துவ கல்லூரி யாக பெற்றுத்தர மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்)* *குழுமம்* *முழு* *முயற்ச்சி மேற்க்கொண்டு அ.இ.அதிமுக.நெலாக்கோட்டை முன்நாள் ஊராட்ச்சி மன்ற தலைவர் திருமதி. S. பிரேமலதா மற்றும் குரு தர்மபிசரன சபாவின் நீலகிரி மாவட செயலாளர் அகிலேஷ் ஆகியோரின் முயற்ச்சியால் பொதுமக்களிடம் பெருமளவில் கையொப்பம் பெற்றுக்கொண்டு மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களிடம் இது சம்பந்தமான ஆவணங்களை 27:7:2020 அன்று சமர்பித்தனர். இது சம்பந்தமாக மாண்புமிகு தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து ஆவணங்களை ஆய்வு செய்து மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் வாயிலாக உடனடியாக மக்களின் துயர் நீக்குவதாக* *தெரிவித்துள்ளார்.* *இதற்க்கான ஆவணங்களையும் அஇஅதிமுக கடந்த தேர்தல் திட்ட மலரையும் மனித ஊரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்) பத்திரிக்கையின் இணை ஆசிரியர் திரு.R.அகிலேஷ் அவர்கள் மாண்புமிகு உள்ளாட்ச்சி துறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களிடம் சமர்ப்பித்தார்.*
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்) செய்திகள்: 26:7:2020 புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்கா பாப்பான்விடுதி கிராமத்தில் வசித்து வரும் S P N செல்வம் Ex கவுன்சிலர் தேர்தல் முன்விரோத காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும்10 அடியாட்களுடன் சேர்ந்து 25/07/20 காலை 11 மணிக்கு வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து செல்வத்தை பெண் என்றும் பாராமல் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்கள் தற்போது ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது சம்மந்தமாக ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் ஏமாற்றி வருகிறார்கள். நடவடிக்கை தாமதமாவதால் குற்றவாளிகள் தப்பிக்க ஏதுவாகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
தமிழ் மாநில கம்யூனிஸ்டு கட்சியின் துவக்கவிழா, கொடி, சட்டதிட்ட அறிமுக விழா, மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா இன்று 30: 8:2020 அன்று அக்கட்சியின் நிருவன தலைவர் திரு.அப்துல் ரகுமான் அவர்களின் வழிகாட்டுதலில் மாநில பொது.செயலாளர் திரு :மதுசூதனன் தலைமையில் நீலகிரி மாவட்டம் சேரங்கோட்டில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பாக மத ஒற்றுமை, பெண்விடுதலை, சாதி ஒழிப்பு போன்றவை குறித்து பேசப்பட்டது இதில் இந்து ,முஸ்லிம், கிருஸ்து ஆகிய மதங்களிலிருந்து மூன்று மதபோதகர்கள் இந்த விழாவை தொடங்கி முடிந்துவைத்தனர்.
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிஃபா மரணம்.. உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் மனாமா: நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 84. பஹ்ரைன் சுதந்திரம் அடைந்த பின்பு 1971ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றவர், இளவரசர் கலிஃபா. தொடர்ந்து அவர்தான் பிரதமராக இருந்தார். எனவே, உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை கலிஃபா பெற்றிருந்தார். இந்த நிலையில்தான், இன்று அவர் மரணமடைந்தார். இதுகுறித்து அரசு ஊடகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மாயோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலிஃபா புதன்கிழமை மரணமடைந்தார். அவரின் இறுதிச் சடங்குகள் இளவரசர் இல்லத்தில் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு அரபு வசந்தம் என்று அழைக்கப்பட்ட போராட்டங்கள் அரபு நாடுகளில் நிகழ்ந்த பொழுது ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டக்காரர்களால் இளவரசர் கலிஃபா பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இவர் மீது போராட்டக்காரர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 1942 முதல் 1961 வரை ஆட்சி செய்த பஹ்ரைனின் முன்னாள் ஆட்சியாளரான ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபாவின் மகன்தான், இந்த கலீஃபா. தனது தந்தையிடமிருந்து ஆட்சி நிர்வாகத்தை இவர் கற்றுக்கொண்டார். சகோதரர் ஷேக் ஈசா பின் சல்மான் அல் கலீஃபா 1961இல் பஹ்ரைன் ஆட்சியைப் பிடித்தார். இதனிடையே
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
Publisher Information
Contact
humanrightswatch2019@gmail.com
9543410000
NO. 61, VENKATA MAISTRY STREET, MANNADY, CHENNAI- 600001
About
Monthly (twice) Magazine
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn