*மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்)* **செய்திகள்:* *28:7:2020.* * *சென்னை* : ஈழுவ, தீயா சமுதாய மக்களின் நீண்டநாள் கேரிக்கையான oc other Cast (இதர வகுப்பினர்)என்று இருந்த நிலையை BC (பிற்படுத்தபட்ட வகுப்பினர்) யாக மாற்றி அமைத்து அவர்களின் உரிமையை நிலைநாட்டி மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் மாண்புமிகு துணை முதல்வர் EPS அவர்களும் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து நேற்று 27:7:2020 அன்று அதற்க்கான சான்றிதழை மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஈமுவ, தீயா சேவா சமாஜ தலைவர் M.R.ரமேஷ்குமார் , ஜூவாலா .J.K,அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கோகுலம் குழுமத்தின் சேர்மேன் திரு.கோகுலம் கோபாலன்,குருதேவ பிரசரனசபா வின் நீலகிரி மாவட்ட செயலாளர் திரு. அகிலேஷ், அவர்களும் கலந்துகொண்டனர். இது சம்பந்தமாக பல கட்ட போராட்டத்தினை பல வருடங்களாக மேற்க்கொண்டுவந்த சூழ்நிலையில் ஈழுவ,தீயா சமுதாய மக்களின் உரிமையை நிலைநாட்டி வரலாற்று சிறப்புமிக்க இந்த உரிமையை மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள் முழுமுயற்ச்சி எடுத்து மண்புமிகு முதல்வரின் கவனத்திற்க்கு கொண்டு சென்று உரிமையை பெற்றுத்தந்துவிட்டதாக அச்சமுதாய தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
Popular posts
*மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை* *இதழ்)* *செய்திகள்:* *31:7:2020:* *சென்னை :* *நீலகிரி மாவட்டம்* *கூடலூர் , பந்தலூர்* *பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் போதிய* *அளவில் இல்லாத காரணத்தால் நோயாளிகளை* *கோவை அல்லது கேரள மாநிலத்திற்க்கு* *கொண்டு செல்லும்போதே உயிரிழப்புகள் ஏற்ப்ட்டு விடுகிறது* . *எனவே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட* *கழகத்துக்கு சொந்தமான எல்லா உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ள Garden Hospital கார்டன் மருத்துவமனையை (ஏலியாஸ் கடை) பொதுமக்களின் பயண்பாட்டுக்கு சிறு மருத்துவ கல்லூரி யாக பெற்றுத்தர மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்)* *குழுமம்* *முழு* *முயற்ச்சி மேற்க்கொண்டு அ.இ.அதிமுக.நெலாக்கோட்டை முன்நாள் ஊராட்ச்சி மன்ற தலைவர் திருமதி. S. பிரேமலதா மற்றும் குரு தர்மபிசரன சபாவின் நீலகிரி மாவட செயலாளர் அகிலேஷ் ஆகியோரின் முயற்ச்சியால் பொதுமக்களிடம் பெருமளவில் கையொப்பம் பெற்றுக்கொண்டு மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களிடம் இது சம்பந்தமான ஆவணங்களை 27:7:2020 அன்று சமர்பித்தனர். இது சம்பந்தமாக மாண்புமிகு தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து ஆவணங்களை ஆய்வு செய்து மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் வாயிலாக உடனடியாக மக்களின் துயர் நீக்குவதாக* *தெரிவித்துள்ளார்.* *இதற்க்கான ஆவணங்களையும் அஇஅதிமுக கடந்த தேர்தல் திட்ட மலரையும் மனித ஊரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்) பத்திரிக்கையின் இணை ஆசிரியர் திரு.R.அகிலேஷ் அவர்கள் மாண்புமிகு உள்ளாட்ச்சி துறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களிடம் சமர்ப்பித்தார்.*
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்) செய்திகள்: 26:7:2020 புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்கா பாப்பான்விடுதி கிராமத்தில் வசித்து வரும் S P N செல்வம் Ex கவுன்சிலர் தேர்தல் முன்விரோத காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும்10 அடியாட்களுடன் சேர்ந்து 25/07/20 காலை 11 மணிக்கு வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து செல்வத்தை பெண் என்றும் பாராமல் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்கள் தற்போது ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது சம்மந்தமாக ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் ஏமாற்றி வருகிறார்கள். நடவடிக்கை தாமதமாவதால் குற்றவாளிகள் தப்பிக்க ஏதுவாகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
தமிழ் மாநில கம்யூனிஸ்டு கட்சியின் துவக்கவிழா, கொடி, சட்டதிட்ட அறிமுக விழா, மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா இன்று 30: 8:2020 அன்று அக்கட்சியின் நிருவன தலைவர் திரு.அப்துல் ரகுமான் அவர்களின் வழிகாட்டுதலில் மாநில பொது.செயலாளர் திரு :மதுசூதனன் தலைமையில் நீலகிரி மாவட்டம் சேரங்கோட்டில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பாக மத ஒற்றுமை, பெண்விடுதலை, சாதி ஒழிப்பு போன்றவை குறித்து பேசப்பட்டது இதில் இந்து ,முஸ்லிம், கிருஸ்து ஆகிய மதங்களிலிருந்து மூன்று மதபோதகர்கள் இந்த விழாவை தொடங்கி முடிந்துவைத்தனர்.
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
ஆறு மாதங்களாக வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்காதவா்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கடிதத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சி.சமயமூா்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநா்கள் மற்றும் கருவூல அலுவலா்களுக்கு அண்மையில் அனுப்பியிருந்தாா். அதன் விவரம்:- ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அவா்களது வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கணக்கில் இருந்து கடந்த ஆறு மாதங்களாக பணப் பரிவா்த்தனைகள் நடைபெறாவிட்டால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கியானது, கருவூலத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழ் அளிக்கவோ அல்லது கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்வதற்கு வசதியாகவோ ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும். வாழ்வுச் சான்றிதழை சமா்ப்பிக்காவிட்டாலோ அல்லது கணக்கு குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்படாவிட்டாலோ ஓய்வூதியதாரா்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெற வேண்டும். சேமிப்பு உள்ளிட்ட இதர அம்சங்களைத் தவிா்த்து, ஓய்வூதியத் தொகையை மட்டும் திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும். இது கருவூலத் துறையில் வரையறுக்கப்பட்ட விதியாகும். கணக்காயத் தலைவா் தகவல்: கருவூலத் துறை அலுவலகங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் கணக்காயத் தலைவா் தனது அறிக்கையில் சில அம்சங்களைச் சுட்டிக் காட்டி வருகிறாா். அதன்படி, வாழ்வுச் சான்றிதழ் சமா்ப்பிப்பதில் தவறுதல் மற்றும் கணக்கு விவரங்கள் ஆய்வு போன்ற நடவடிக்கைக்காக ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க வேண்டுமெனக் கூறியுள்ளாா். மேலும், ஓய்வூதியதாரா், குடும்ப ஓய்வூதியதாரா் இறப்புக்குப் பிறகும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. இதனைத் தடுத்து, அந்தத் தொகையை அரசின் கணக்கில் வரவு வைக்க வேண்டுமென கணக்காயத் தலைவா் தனது அறிக்கைகளில் தெரிவித்துள்ளாா். இதுகுறித்த தகவல்களை, கருவூலத் துறை அலுவலகங்களைச் சோ்ந்த அதிகாரிகள் தங்களுக்குக் கீழுள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலா்களுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், கடந்த ஆறு மாதங்களாக ஓய்வூதியத்தை எடுத்துப் பயன்படுத்தாத விவரங்களைச் சேகரித்து பட்டியலிட வேண்டும். ஆறு மாதங்களாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து பயன்படுத்தாத ஓய்வூதியத் தொகையை மீளப்பெற்று அதனை வங்கிக் கணக்கில் சோ்க்க வேண்டும். இதுதொடா்பான பணிகளை கருவூலத் துறையின் மண்டல இணை இயக்குநா்கள் உன்னிப்பாகக் கவனித்து அவ்வப்போது உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென தனது கடிதத்தில் சமயமூா்த்தி கேட்டுக் கொண்டுள்ளாா். தொற்றுக் காலத்தில் ஏன்? கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் வாழ்வுச் சான்றினை சமா்ப்பிக்கத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், வங்கி பற்று அட்டை இல்லாதோா், வெளி நாடுகளில், வெளி மாநிலங்களில் வசிப்போா் வங்கிகளுக்குச் சென்று பணத்தை எடுப்பது இயலாத காரியம். மூத்த குடிமக்கள் பலரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாகவே வங்கிகளுக்குச் செல்லவில்லை. எனவே, இந்த பெருந் தொற்று காலத்தில் ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென ஓய்வூதியதாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிஃபா மரணம்.. உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் மனாமா: நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 84. பஹ்ரைன் சுதந்திரம் அடைந்த பின்பு 1971ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றவர், இளவரசர் கலிஃபா. தொடர்ந்து அவர்தான் பிரதமராக இருந்தார். எனவே, உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை கலிஃபா பெற்றிருந்தார். இந்த நிலையில்தான், இன்று அவர் மரணமடைந்தார். இதுகுறித்து அரசு ஊடகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மாயோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலிஃபா புதன்கிழமை மரணமடைந்தார். அவரின் இறுதிச் சடங்குகள் இளவரசர் இல்லத்தில் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு அரபு வசந்தம் என்று அழைக்கப்பட்ட போராட்டங்கள் அரபு நாடுகளில் நிகழ்ந்த பொழுது ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டக்காரர்களால் இளவரசர் கலிஃபா பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இவர் மீது போராட்டக்காரர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 1942 முதல் 1961 வரை ஆட்சி செய்த பஹ்ரைனின் முன்னாள் ஆட்சியாளரான ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபாவின் மகன்தான், இந்த கலீஃபா. தனது தந்தையிடமிருந்து ஆட்சி நிர்வாகத்தை இவர் கற்றுக்கொண்டார். சகோதரர் ஷேக் ஈசா பின் சல்மான் அல் கலீஃபா 1961இல் பஹ்ரைன் ஆட்சியைப் பிடித்தார். இதனிடையே
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
Publisher Information
Contact
humanrightswatch2019@gmail.com
9543410000
NO. 61, VENKATA MAISTRY STREET, MANNADY, CHENNAI- 600001
About
Monthly (twice) Magazine
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn