ஆறு மாதங்களாக வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்காதவா்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கடிதத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சி.சமயமூா்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநா்கள் மற்றும் கருவூல அலுவலா்களுக்கு அண்மையில் அனுப்பியிருந்தாா். அதன் விவரம்:- ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அவா்களது வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கணக்கில் இருந்து கடந்த ஆறு மாதங்களாக பணப் பரிவா்த்தனைகள் நடைபெறாவிட்டால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கியானது, கருவூலத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழ் அளிக்கவோ அல்லது கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்வதற்கு வசதியாகவோ ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும். வாழ்வுச் சான்றிதழை சமா்ப்பிக்காவிட்டாலோ அல்லது கணக்கு குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்படாவிட்டாலோ ஓய்வூதியதாரா்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெற வேண்டும். சேமிப்பு உள்ளிட்ட இதர அம்சங்களைத் தவிா்த்து, ஓய்வூதியத் தொகையை மட்டும் திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும். இது கருவூலத் துறையில் வரையறுக்கப்பட்ட விதியாகும். கணக்காயத் தலைவா் தகவல்: கருவூலத் துறை அலுவலகங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் கணக்காயத் தலைவா் தனது அறிக்கையில் சில அம்சங்களைச் சுட்டிக் காட்டி வருகிறாா். அதன்படி, வாழ்வுச் சான்றிதழ் சமா்ப்பிப்பதில் தவறுதல் மற்றும் கணக்கு விவரங்கள் ஆய்வு போன்ற நடவடிக்கைக்காக ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க வேண்டுமெனக் கூறியுள்ளாா். மேலும், ஓய்வூதியதாரா், குடும்ப ஓய்வூதியதாரா் இறப்புக்குப் பிறகும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. இதனைத் தடுத்து, அந்தத் தொகையை அரசின் கணக்கில் வரவு வைக்க வேண்டுமென கணக்காயத் தலைவா் தனது அறிக்கைகளில் தெரிவித்துள்ளாா். இதுகுறித்த தகவல்களை, கருவூலத் துறை அலுவலகங்களைச் சோ்ந்த அதிகாரிகள் தங்களுக்குக் கீழுள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலா்களுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், கடந்த ஆறு மாதங்களாக ஓய்வூதியத்தை எடுத்துப் பயன்படுத்தாத விவரங்களைச் சேகரித்து பட்டியலிட வேண்டும். ஆறு மாதங்களாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து பயன்படுத்தாத ஓய்வூதியத் தொகையை மீளப்பெற்று அதனை வங்கிக் கணக்கில் சோ்க்க வேண்டும். இதுதொடா்பான பணிகளை கருவூலத் துறையின் மண்டல இணை இயக்குநா்கள் உன்னிப்பாகக் கவனித்து அவ்வப்போது உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென தனது கடிதத்தில் சமயமூா்த்தி கேட்டுக் கொண்டுள்ளாா். தொற்றுக் காலத்தில் ஏன்? கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் வாழ்வுச் சான்றினை சமா்ப்பிக்கத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், வங்கி பற்று அட்டை இல்லாதோா், வெளி நாடுகளில், வெளி மாநிலங்களில் வசிப்போா் வங்கிகளுக்குச் சென்று பணத்தை எடுப்பது இயலாத காரியம். மூத்த குடிமக்கள் பலரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாகவே வங்கிகளுக்குச் செல்லவில்லை. எனவே, இந்த பெருந் தொற்று காலத்தில் ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென ஓய்வூதியதாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்


Popular posts
29:6:2020 Braking News ஜீ ஜின்பிங்கும் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள்.. சீனத் துருப்புகள் ஊடுருவுகிறது.. ப.சிதம்பரம் சாடல் சென்னை: சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது எப்படி என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லை பிரச்சினை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் எல்லையில் நடப்பதை மறைக்கிறார், சீனாவுக்கு நற்சான்று தருகிறார் என காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தது. இந்த நிலையில் சோனியாவை தலைவராக கொண்ட ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிலிருந்து நன்கொடை பெற்றதை பாஜக சுட்டிக் காட்டி விமர்சனங்களை முன் வைத்தது. பெரிய பெரிய கூடாரம்.. அதிர வைத்த அந்த 9 கிமீ பகுதி.. கல்வானில் சீனாவின் திட்டம்தான் என்ன? பின்னணி! கொரோனா குற்றச்சாட்டு இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா நிதி குறித்து (பிஎம் கேர்ஸ்) காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிதிக்கு சீனாவில் இருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நேற்றைய தினம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் சீனாவை ஏன் ஆக்கிரமிப்பாளர் என பிரதமர் மோடி அழைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. ப சிதம்பரம் நிவாரண நிதியம் இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் 2005-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ.1 கோடியே 45 லட்சம் நன்கொடை பெற்றது தவறு என்றால், 2020-ம் ஆண்டில் சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள ‘பி.எம்.-கேர்ஸ்' (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்) நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? ஊடுருவல் சீன நிறுவனங்கள் சீனா எப்போது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020-ல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்கு பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா? 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ 1.45 கோடி நன்கொடை பெற்றது தவறு என்றால் 2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள PM-CARES நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? 1,015 பிற்பகல் 9:23 - 28 ஜூன், 2020 Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை இதைப் பற்றி 382 பேர் பேசுகிறார்கள் ஊஞ்சலாடும் 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், இந்திய பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? என ப சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Image
*மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்)* **செய்திகள்:* *28:7:2020.* * *சென்னை* : ஈழுவ, தீயா சமுதாய மக்களின் நீண்டநாள் கேரிக்கையான oc other Cast (இதர வகுப்பினர்)என்று இருந்த நிலையை BC (பிற்படுத்தபட்ட வகுப்பினர்) யாக மாற்றி அமைத்து அவர்களின் உரிமையை நிலைநாட்டி மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் மாண்புமிகு துணை முதல்வர் EPS அவர்களும் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து நேற்று 27:7:2020 அன்று அதற்க்கான சான்றிதழை மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஈமுவ, தீயா சேவா சமாஜ தலைவர் M.R.ரமேஷ்குமார் , ஜூவாலா .J.K,அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கோகுலம் குழுமத்தின் சேர்மேன் திரு.கோகுலம் கோபாலன்,குருதேவ பிரசரனசபா வின் நீலகிரி மாவட்ட செயலாளர் திரு. அகிலேஷ், அவர்களும் கலந்துகொண்டனர். இது சம்பந்தமாக பல கட்ட போராட்டத்தினை பல வருடங்களாக மேற்க்கொண்டுவந்த சூழ்நிலையில் ஈழுவ,தீயா சமுதாய மக்களின் உரிமையை நிலைநாட்டி வரலாற்று சிறப்புமிக்க இந்த உரிமையை மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள் முழுமுயற்ச்சி எடுத்து மண்புமிகு முதல்வரின் கவனத்திற்க்கு கொண்டு சென்று உரிமையை பெற்றுத்தந்துவிட்டதாக அச்சமுதாய தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
Image
*மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை* *இதழ்)* *செய்திகள்:* *31:7:2020:* *சென்னை :* *நீலகிரி மாவட்டம்* *கூடலூர் , பந்தலூர்* *பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் போதிய* *அளவில் இல்லாத காரணத்தால் நோயாளிகளை* *கோவை அல்லது கேரள மாநிலத்திற்க்கு* *கொண்டு செல்லும்போதே உயிரிழப்புகள் ஏற்ப்ட்டு விடுகிறது* . *எனவே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட* *கழகத்துக்கு சொந்தமான எல்லா உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ள Garden Hospital கார்டன் மருத்துவமனையை (ஏலியாஸ் கடை) பொதுமக்களின் பயண்பாட்டுக்கு சிறு மருத்துவ கல்லூரி யாக பெற்றுத்தர மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்)* *குழுமம்* *முழு* *முயற்ச்சி மேற்க்கொண்டு அ.இ.அதிமுக.நெலாக்கோட்டை முன்நாள் ஊராட்ச்சி மன்ற தலைவர் திருமதி. S. பிரேமலதா மற்றும் குரு தர்மபிசரன சபாவின் நீலகிரி மாவட செயலாளர் அகிலேஷ் ஆகியோரின் முயற்ச்சியால் பொதுமக்களிடம் பெருமளவில் கையொப்பம் பெற்றுக்கொண்டு மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களிடம் இது சம்பந்தமான ஆவணங்களை 27:7:2020 அன்று சமர்பித்தனர். இது சம்பந்தமாக மாண்புமிகு தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து ஆவணங்களை ஆய்வு செய்து மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் வாயிலாக உடனடியாக மக்களின் துயர் நீக்குவதாக* *தெரிவித்துள்ளார்.* *இதற்க்கான ஆவணங்களையும் அஇஅதிமுக கடந்த தேர்தல் திட்ட மலரையும் மனித ஊரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்) பத்திரிக்கையின் இணை ஆசிரியர் திரு.R.அகிலேஷ் அவர்கள் மாண்புமிகு உள்ளாட்ச்சி துறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களிடம் சமர்ப்பித்தார்.*
Image
சென்னை: இலவச வேட்டி - சேலை திட்டத்தில் 21 கோடியே 31 லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக வைக்கப்பட்டு இருக்கும் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைத்தறித் துறை அதிகாரிகளுக்கு எதிராக இந்த புகார் வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஏழை எளிய மக்களுக்கு ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி -சேலை உற்பத்தி செய்வதற்கான நூல்களை, தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது.இதில் ஒரு சேலைக்கு, 260 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்ததன் மூலம், 21 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 250 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகக் கூறி, திருப்பூரை சேர்ந்த முத்தூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார். செம கிளிக்.. மோடி எங்கே போனாலும்.. பின்னாடியே போவாரே அவர்.. ஞாபகம் இருக்கா.. அவர் இவர்தான் அந்த மனுவில், ஒரு நாளைக்கு 6 சேலைகள் நெய்யப்படும் நிலையில், தரம் குறைந்த நூல்களை நெய்வதற்கு வழங்கியதால் ஒரு நாளை 3 சேலைகளை மட்டுமே நெய்வதால் தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறியுள்ளார். தரம் குறைந்த நூல்களை, அதிக விலைக்கு கொள்முதல் செய்ததன் மூலம், அரசுக்கு 21.31 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது . இதனால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் ஜவுளி துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார். மாவட்ட கவுன்சிலர்களை தட்டி தூக்கிய திமுக.. ஒன்றிய கவுன்சிலர்களை அள்ளிய அதிமுக.. தேர்தலில் டிவிஸ்ட் மேலும், தங்கள் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு உத்தரவிடவும் கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி மனுதாரர் கொடுத்த மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூன்று மாதத்திற்குள் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
Image
பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிஃபா மரணம்.. உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் மனாமா: நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 84. பஹ்ரைன் சுதந்திரம் அடைந்த பின்பு 1971ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றவர், இளவரசர் கலிஃபா. தொடர்ந்து அவர்தான் பிரதமராக இருந்தார். எனவே, உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை கலிஃபா பெற்றிருந்தார். இந்த நிலையில்தான், இன்று அவர் மரணமடைந்தார். இதுகுறித்து அரசு ஊடகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மாயோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலிஃபா புதன்கிழமை மரணமடைந்தார். அவரின் இறுதிச் சடங்குகள் இளவரசர் இல்லத்தில் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு அரபு வசந்தம் என்று அழைக்கப்பட்ட போராட்டங்கள் அரபு நாடுகளில் நிகழ்ந்த பொழுது ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டக்காரர்களால் இளவரசர் கலிஃபா பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இவர் மீது போராட்டக்காரர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 1942 முதல் 1961 வரை ஆட்சி செய்த பஹ்ரைனின் முன்னாள் ஆட்சியாளரான ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபாவின் மகன்தான், இந்த கலீஃபா. தனது தந்தையிடமிருந்து ஆட்சி நிர்வாகத்தை இவர் கற்றுக்கொண்டார். சகோதரர் ஷேக் ஈசா பின் சல்மான் அல் கலீஃபா 1961இல் பஹ்ரைன் ஆட்சியைப் பிடித்தார். இதனிடையே
Image